எம்மைப் பற்றி
வணக்கம்,
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளான 26.09.2010 தொடக்கம் EELAMPRESS.COM என்னும் இணையத்தளம் ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் புனிதமானவை கருத்துக்கள் சுதந்திரமானவை என்ற ஊடகக் கோட்பாட்டுக்கு அமைவாக எமது செய்திச் சேவை இயங்குகிறது தமிழ் மொழி வளச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் சோர்வில்லாது உழைக்க உறுதி பூண்டுள்ளோம்
செய்திகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடும் போது தவறுகள் தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்றன புதியதே செய்தி என்பதால் உண்மைத் தன்மை பற்றிய ஆய்வுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. எனவே எமது தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை அல்லது ஆதாரத் தரவுகள் என்பவற்றிற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.
தாயகச் செய்திகளையும் புலத்தின் செய்திகளையும் வெளியிடும் அதேவேளையில் பல்சுவை இணையதளமாகவும் இடம்பெற வேண்டும் என்று பேரவா எமக்கு உண்டு. எமது இணையத்தளத்தை ஆதரித்து ஊக்குவிக்கும் அபிமானிகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். விரிவாக்கம் வளர்ச்சியின் வெளிப்பாடு என்பதால் நாளடைவில் எமது சேவையின் பரப்பளவு விரிவடையும் என்பது திண்ணம்.
“ஈழத் தமிழர்களின் உரிமைக் குரல்”
நன்றி.
அன்புடன்,
Eelam Press – ஆசிரியர் குழுவினர்







