ஈரான் அணு ஆயுதப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு எதிராக அந்த நாட் டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கோ அல்லது மேற்குலகத்திற்கோ கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் முரட்டுத்தனமான நடவடிக்கையால் உலக நாடுகள் நாளாந்தம் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இலங்கைக்கான ஈரானின் தூதுவர் பேராசிரியர் எம்.என்.ஹசனிபூருடன் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டுக்குள் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரத்தைப் பெற் றுக்கொடுக்கும் அரசின் திட்டத்திற்கு கடன், முதலீட்டு வசதிகளை செய்து கொடுக்கும் ஈரான் அரசுடன், அந்த மின்திட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
எண்ணெய் வளமுடைய ஈராக்கின் உதவிகள் எமக்கு அவசியம் என்றும் எடுத்து ரைத்தார் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



