வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச அழுத்தத்துடன் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கும் அதிக ஆதரவு வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் ஐரோப்பிய நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவலாக உள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வன் ஓடன் இதன்போது தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் இக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



