ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூனின் மியான்மர் நாட்டு சிறப்பு ஆலோசகராக, விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர் விஜய் நம்பியார். கடந்த 2007ம் ஆண்டு முதல், அவர் ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூனின் தலைமை அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, மியான்மர் நாட்டின் சார்பில், பான் கி மூனின் ஆலோசகராக, தற்போது விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பான் கி மூன் குறிப்பிடுகையில், “சமீப காலமாக, மியான்மர் நாட்டில் ஜனநாயக நடைமுறைகள் காணப்படுகின்றன. அங்குள்ள அரசியல் கைதிகளில், பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இதையடுத்து, விரைவில் மியான்மரில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன்’ என்றார்.



