கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு சிறைச்சாலை உயரதிகாரிகளும், எட்டு போதைப் பொருள் வர்த்தகர்களும் கூட்டாக இணைந்து இந்தத் தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸாரும் கூட்டாக இணைந்து நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய மகசீன் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியாக எமில் ரஞ்சன் நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கப்பம் கோரல் மற்றும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளன. இதனால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கும் வருமானம் குறைவடைந்துள்ளது.
இதற்குத் தீர்வாக, சிறைச்சாலை பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் நோக்கில் பாரியளவில் மகசீன் சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உயர் அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.



